ADN Bukit Lanjan, Elizabeth Wong meninjau proses vaksinasi dalam program Vaksin Orang Asli di Pusat Pemberian Vaksin (PPV) Dewan Desa Temuan Bukit Lanjan pada 11 Ogos 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

90.4 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், அக் 12- நாட்டில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காட்டைத் தாண்டி விட்டது. நேற்று வரை 90.4 விழுக்காட்டினர் அல்லது  2 கோடியே 11 லட்சத்து 54 ஆயிரத்து 357 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 94.9 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 22 லட்சத்து 207 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக  சுகாதார அமைச்சின் அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.

நேற்று நாடு முழுவதும் 184,486 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 52,302 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 132,184 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி  பிக் எனப்படும்  தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சத்து 35 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, 12 முதல் 17 வயதுடைய இளையோரில் 283,023 பேர் அல்லது 9.0 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.  மேலும் 23 லட்சத்து 10 ஆயிரத்து 495 பேர் அல்லது 64.4 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Pengarang :