HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை நேற்று குறைந்தது- மூன்று புதிய தொற்று மையங்கள் கண்டு பிடிப்பு

கோலாம்பூர், அக் 25- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 5,666 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 6,978 ஆக இருந்தது.

நேற்று நாடு முழுவதும் புதிதாக மூன்று நோய்த் தொற்று மையங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஜோகூரில் வேலையிட தொற்று மையம் மற்றும் நோய்த் தாக்கம் கொண்ட தொற்று மையம் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்ட வேளையில் சிலாங்கூரில் சமூகத்தை உள்ளடக்கிய தொற்று மையம் அடையாளம் காணப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

நேற்று பதிவு செய்யப்பட்ட 5,666 கோவிட் சம்பவங்களில் 107 அதாவது 1.9 விழுக்காடு மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் 5,559 சம்பவங்கள் அல்லது 98.1 விழுக்காடு ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இது தவிர 20 வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோய்த் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டன. உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட சம்பவங்களில் 5,646 மலேசிய பிரஜைகளையும் 197 வெளிநாட்டு பிரஜைகளையும் உள்ளடக்கியிருந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 601 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 299 பேருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.


Pengarang :