ECONOMYMEDIA STATEMENTNATIONAL

குழாய் பழுதுபார்ப்பு பணி முற்றுப் பெற்றது- தலைநகரில் நீர் விநியோகம் தொடங்கியது

கோலாலம்பூர், நவ 10- மத்திய சுற்றுச் சாலை இரண்டில் (எம்.ஆர்.ஆர்.2) ஏற்பட்ட குழாய் உடைப்பு நேற்று பின்னிரவு 12.30 மணியளவில் சரி செய்யப்பட்டது.

நீர் சேகரிப்பு குளத்தில் நீர் நிரம்பி அதன் தரம் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள விதிகளுகேற்ப உள்ளது உறுதி செய்யப்பட்டப் பின்னர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பொதுமக்களுக்கு நீரை விநியோகிக்கும் பணி தொடங்கியதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தெரிவித்தது.

நாளை 11 ஆம் தேதி பின்னிரவு 12.30 மணியளவில் அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நீர் விநியோகத் தடையினால் தாமான் மூடா, தாமான் புக்கிட் பெர்மாய், தாமான் புக்கிட் பண்டான், கம்போங் செராஸ் பாரு, தாமான் மாவார், தாமான் புக்கிட் தெராத்தாய், தாமான் செராயா, தாமான் மெலுர்,  தாமான் சாகா, தாமான் புத்ரா, பண்டான் மேவா, தாமான் மஸ்திகா ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன.

குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள இடத்தின் தொலைவு மற்றும் நீர் அழுத்தம் அகியவற்றின் அடிப்படையில் நீர் விநியோக நேரம் மாறுபடும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.


Pengarang :