MEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூரில் காலரா நோய்- பொது மக்களுக்கு அமைச்சர் கைரி எச்சரிக்கை

ஷா ஆலம், நவ 15- பெட்டாலிங் மாவட்டத்தில் ஒரு காலரா நோய்ச் சம்பவத்தை சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

பொதுமக்கள் கொதிக்க வைக்கப்பட்ட மற்றும் சுத்திரிக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்த வேண்டும் என்பதோடு சமைக்கப்படாத அல்லது முழுமையாகச் சமைக்கப்படாத உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும்  அவர் அறிவுறுத்தினார்.

விப்ரியோ காலரா எனும் கிருமியினால் பரவக் கூடிய காலரா நோய் வலி இல்லா வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற தொடக்கக்கட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்பதோடு உடலில் நீர்ச்சத்தை குறைத்து மரணத்திற்கு இட்டுச் செல்லும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உறுதி செய்யப்பட்ட இத்தகைய நோய் தொடர்பான விபரங்களை உடனடியாக மாவட்ட சுகாதார அலுவலகங்களிடம் 24 மணி நேரத்தில் தெரிவிக்கும்படி அனைத்து மருத்துவர்களையும் மாநில சுகாதார இலாகா கேட்டுக் கொண்டுள்ளது.

 


Pengarang :