Ketua Angkatan Muda Keadilan (AMK) Selangor, Najwan Halimi menyampaikan ucapan ketika program Majlis Jelajah Presiden ke Negeri Selangor 2020 di Kediaman Rasmi Dato’ Menteri Besar, Shah Alam pada 7 Ogos 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மலாக்கா தேர்தல் : கருத்திணக்க முடிவுக்கு மதிப்பளியுங்கள்- கெஅடிலான் வலியுறுத்து

ஷா ஆலம், நவ 24- பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் கட்சியில் உள்ள கருத்திணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சிலாங்கூர் கெடிலான் தகவல் பிரிவுத் தலைவர் கூறினார்.

எனவே, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நோக்கி விரல் நீட்டி குற்றஞ்சாட்டுவதும் மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்காக அவரை ராஜினாமா செய்ய வற்புறுத்துவதும் பொறுப்பற்ற செயலாகும் என்று ஹாலிமி அபு பாக்கார் கூறினார்.

மலாக்கா தேர்தல் முடிவு உண்மையில் ஹரப்பானுக்கு  பெரிய அடியாகும், ஆனால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் அனைத்து தலைவர்களுடனும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலானது. தனிப்பட்ட முடிவுகள் அல்ல.

எனவே, ஹராப்பானில் உள்ள எந்தத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரின் விருப்பப்படி அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுவது போல் அவரை நோக்கி விரல் நீட்டுவது மிகவும் பொருத்தமற்றது என்று ஹாலிமி   அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற  மலாக்கா மாநிலத் தேர்தலில் ஹராப்பான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு அன்வாரை வலியுறுத்தி ஜசெகவை சேர்ந்த பிலுட் மாநில சட்டமன்ற உறுப்பினர் லீ சின் சென் அறிக்கை வெளியிட்டுள்ளஞு குறித்து அவர் கருத்து கருத்துரைத்தார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் 13 இடங்களைப் பெற்ற ஹரப்பான், இந்த தேர்தலில் ஐந்து  சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே  வென்றது.

இத்தேர்தலில் பாரிசான் நேஷனல் 21 மாநில இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது.  பெரிக்காத்தான் நேஷனல் இரண்டு இடங்களை மட்டுமே வென்றது.

Pengarang :