Kakitangan Tourism Selangor melafazkan ikrar bebas rasuah di Auditorium Perpustakaan Raja Tun Uda, Shah Alam pada 9 Julai 2020. Foto Tourism Selangor
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

  சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு  சிறப்பு உதவியாக  ஒன்றரை மாத சம்பளம்

ஷா ஆலம் 26 நவ;-அரசு ஊழியர்களுக்கு  சிறப்பு உதவியாக  ஒன்றரை மாத சம்பளம் சிலாங்கூர்  அரசு ஊழியர்கள் அனைவரும் இவ்வாண்டு சிறப்பு உதவியாக  ஒன்றரை மாத சம்பளத்தை பெறுவார்கள்.

மாநில அரசாங்க  சேவை தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு  சிலாங்கூர் அரசு ஊழியர்களின் கடப்பாட்டையும்  முயற்சியையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த சிறப்பு உதவி   வழங்கப்படுவதாக  மாநில மந்திரிபுசார்   அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இவ்வாண்டு நோன்பு பெருநாளுக்கு முன்னதாக  ஒன்றரை மாத சம்பளத்தில் குறைந்த பட்ச தொகையாக ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்பட்டது.  எஞ்சிய அரை மாத  சம்பளத் தொகையான ஆயிரம் ரிங்கிட் இவ்வண்டு டிசம்பர்   29 ஆம் தேதி வழங்கப்படும்.


Pengarang :