ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

விரைவாகப் பரவும் ஒமிக்ரோன்- கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம்

ஷா ஆலம், டிச 2- உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் நோய்த் தொற்று அதிவேகத்தில் பரவக்கூடிய தன்மை கொண்டுள்ளதை இதுவரை கிடைத்துள்ளத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.

அந்த புதிய வகை திரிபு அதிக விரைவாக பரவும் சாத்தியம் உள்ளதாக று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.

வி.ஒ.சி.எனப்படும் அச்சமூட்டும் இதர வகை நோய்த் தொற்றுகளை விட இந்த ஒமிக்ரோன் தொற்று அதிக பாதிப்பைக் கொண்டு வரும் எனவும் அஞ்சப்படுகிறது என்பதை தொடக்கக் கட்ட ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் உடலில் வெகுவாக விரிவாக்கம் காணும் தன்மையை இந்த தொற்று கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இந்த ஒமிக்ரோன் வகை தொற்று 26 முதல் 36 ஸ்பைக் புரோட்டின் எனப்படும் புரத இழைகளைக் கொண்டுள்ளது. மனித செல்களில் ஊடுருவும் தன்மை கொண்ட பத்து பிறழ்வுகள் இதில் உள்ளன என்றார் அவர்.

பேட்டா தொற்று மூன்று பிறழ்வுகளையும் டெல்டா வகை தொற்று இரண்டு  பிறழ்வுகளையும் கொண்டுள்ளதுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரோன் தொற்றின் தீவிரத் தன்மையை நம்மால் உணர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :