ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

இ.சி.ஆர்.எல். திட்ட தெற்கு வழித்தட பரிந்துரையை மத்திய அரசு பரிசீலிக்கும்- சிலாங்கூர் நம்பிக்கை

கோலாலம்பூர், நவ 3- கிழக்கு கரை இரயில் திட்டத்தை (இ.சி.ஆர்.எல்.) எதிர்காலத்தில் தெற்கு வழித் தடத்தில் நிர்மாணிக்க வேண்டும் என்ற சிலாங்கூர் அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் சிலாங்கூர் அரசு எதிர்பார்க்கிறது.

தெற்கு வழித்தடம் பகாங் மாநிலத்தின் மெந்தகாப்பில் தொடங்கி கோல கிளவாங், நீலாய்  புத்ரா ஜெயா மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் ஜென்ஜாரோம் வழியாக மேற்கு துறைமுகத்தை அடைகிறது.
வடக்கு வழித்தடத்திற்கு மாநில அரசு வழங்கும் ஆதரவுக்கு இது முன்நிபந்தனையாக இல்லாவிட்டாலும் மத்திய அரசு தங்களின் கோரிக்கையை பெருமனதுடன் பரிசீலிக்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இ.சி ஆர்.எல். திட்டத்தின் செக்சன் சி  வழித்தட விவகாரத்தில் இரு தரப்புக்கும் சரிசமமான வெற்றி கிட்டும் வகையில் மத்திய அரசு எதிர்கால வளர்ச்சித் திட்டத்தில் தெற்கு வழித்தடத்தையும்  உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர். கேரித்தீவை சிலாங்கூர் மாநிலத்தின் பிரதான சரக்கு விநியோக மையமாக மாநில அரசின் முடிவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

Pengarang :