EKSKLUSIFMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஷா ஆலம் அரங்கை மேம்படுத்த 14 நிறுவனங்கள் ஆர்வம்- மந்திரி புசார்

ஷா ஆலம், டிச 4- ஷா ஆலம் விளையாட்டரங்கை மேம்படுத்த 14 நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. அந்த நிறுவனங்களில் பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுப்பது தொடர்பில் மாநில அரசு அடுத்த மாதம் முடிவெடுக்கும். 

செக்சன் 13இல் அமைந்துள்ள அந்த அரங்கை தரம் உயர்த்துவது தொடர்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பரிந்துரைகளை மாநில அரசு பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கூறினார்.

புதிய அரங்கை நிர்மாணிப்பதும் அந்த  பரிந்துரைகளில் அடங்கும் என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

அந்த அரங்கை மேம்படுத்துவது தொடர்பில் 14 நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகளை நாங்கள் பெற்றுள்ளோம். அந்த பரிந்துரைகள் 20 கோடி முதல் 80 கோடி வெள்ளி வரையிலான மதிப்பைக் கொண்டவையாகும். நாங்கள் தொகையைப் பார்க்கவில்லை. மாறாக, அவ்வரங்கை மேம்படுத்துவதில் அந்நிறுவனங்களுக்கு உள்ள ஆற்றலை உறுதி செய்ய விரும்புகிறோம் என்றார் அவர்.

இவ்விவகாரத்தில் நாங்கள் அவசரம் காட்ட முடியாது. காரணம் இது 80 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய திட்டமாகும். சிலர் தரம் உயர்த்துவதற்கும் சிலர் புதிய அரங்கை நிர்மாணிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளனர். எனினும். சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் பரிந்துரையை நாங்கள் ஆராய வேணடியுள்ளது என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் காரணத்தால் அந்த அரங்கம் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்பதுதான் மாநில அரசின் நிலைப்பாடாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :