HEALTHMEDIA STATEMENTSELANGOR

கோலக் கிள்ளானில் முதியவர் படுகொலை- ஆடவர் மீது குற்றச்சாட்டு

கிள்ளான், டிச 17- கோலக்கிள்ளான் நகரில் முதியவர் ஒருவரை படுகொலை செய்ததாக வேலையில்லாத ஆடவர் ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்ரேட் பி.சாருலதா முன்னிலையில்  தனக்கெதிரான  கொலைக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 33 வயதான முகமது ஷஹாருள் சம்சுடின் அமைதியாக நின்றிருந்தார். அவரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த 10ஆம் தேதி பிற்பகல் 12.38 மணியளவில் கோலக் கிள்ளான் கம்போங் இடாமானில் உள்ள ஒரு வீட்டின் எதிரே முகமது சானி அப்துல்லா (வயது 69) என்ற முதியவரை படுகொலை செய்ததாக முகமது சம்சுல் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.

முன்னதாக, முகமது சாஹாருள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் கே.நதியா, தனது கட்சிக்காரருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சாஹாருள் மனநல பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் எனினும் அவர் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சையைப் பெறவில்லை என்றும் அவரின் குடும்பத்தினர் கூறுவதாக நதியா சொன்னார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை மனநல மருத்துவனையில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


Pengarang :