ACTIVITIES AND ADSECONOMYNATIONAL

ஹிஜ்ரா மோரமோட்டோரியம் சலுகை வழி 921 தொழில் முனைவோர் பயனடைந்தனர்

ஷா ஆலம், ஜன 3- வர்த்தக கடனை திரும்பச் செலுத்துவதை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்க வகை செய்யும் ஹிஜ்ரா அறவாரியத்தின் மேரட்டோரியம் சலுகையின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 921 தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.

கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய இந்த சலுகைத் திட்டத்தின் வாயிலாக அந்த இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோரின் சுமையை குறைப்பதில் ஓரளவு உதவ முடியும் என தாங்கள் நம்புவதாக அந்த அறவாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுப்பாராடி முகமது நோர் கூறினார்.

இந்த மோரட்டோரியம் சலுகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக் அவகாசம் கடந்த 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்து விட்டது உற்பத்தி, உணவு தயாரிப்பு, சேவை, விவசாயம், கால் நடை வளர்ப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் பயன்பெற்றன என்றார் அவர்.

இந்த மோரட்டோரியம் சலுகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் என நம்புகிறோம். கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட தொகையை வெள்ளத்திற்கு பிந்தைய சீரமைப்பு பணிகளுக்கும் வர்த்தகத்திற்கு புத்துயிரூட்டுவதற்கும் அவர்கள் பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் ஹிஜ்ரா கடன் தொகையை செலுத்துவதை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்க அனுமதிக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 21 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :