ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

வெள்ளம்- கோலக் கிள்ளான் தொகுதி மக்களுக்கு வெ.100,000 செலவில் உதவித் திட்டங்கள்

கிள்ளான், ஜன 13– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கோலக் கிள்ளான் தொகுதி இதுவரை ஒரு லட்சம் வெள்ளிக்கும் மேல் செலவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் கூடைகள், மெத்தை, தலையணை, படுக்கை விரிப்பு போன்ற பொருள்களை வழங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான்ஜூரி கூறினார்.

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் கோலக் கிள்ளான் தொகுதியில் சுமார் 5,000 வீடுகள் பாதிக்கப்பட்டன. இறைவன் அருளால், முடிந்த அளவு அவர்களுக்கு உதவிகளை வழங்கினோம் என்றார் அவர்.

வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை நல்கிய அரசு சாரா அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்க உதவி தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் தொகுதி சேவை மையத்தை அணுகலாம். எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு வழங்க தயாராக உள்ளோம் என்றார் அவர்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் கோலக் கிள்ளான் தொகுதியிலுள்ள பண்டமாரான் ஜெயா, கம்போங் இடாமான், கம்போங் பூலாவ் இண்டா, கம்போங் பெண்டாமார், கம்போங் தெலுக் கோங், கம்போங் தெலுக் இண்டா ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன.


Pengarang :