ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று  இன்று 21,072 ஆக குறைந்தது

ஷா ஆலம், பிப் 13- கடந்த வாரம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் இன்று சற்று தணிந்துள்ளது.  மொத்தம் 21,072 பேர் இன்று இந்நோய்க்கு இலக்காகியுள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 22,802 ஆக இருந்தது.

இன்று பதிவான மொத்த நோய்த் தொற்றுகளில் 20,986 அல்லது 99.59 விழுக்காடு நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் மற்றும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

எஞ்சிய 84 சம்பவங்கள் அதாவது 0.41 விழுக்காடு அதிக ஆபத்து கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை கொண்டவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஒன்று முதல் ஐந்தாம் கட்டம் வரையிலான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் கட்டம் – 5,995 சம்பவங்கள் (28.45%)

2 ஆம் கட்டம் – 14,991 சம்பவங்கள் (71.14%)

3 ஆம் கட்டம் – 58 சம்பவங்கள் (0.28%)

4 ஆம் கட்டம் – 20 சம்பவங்கள் (0.09%)

5 ஆம் கட்டம் – 8 சம்பங்கள் (0.04%)

இம்மாதம் 6 ஆம் தேதி முதல் நாடு ஐந்து இலக்க கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கையை பதிவு செய்து வந்த து. நேற்று ஒரே நாளில் 2,000 சம்பவங்கள் அதிகரித்து நோய்த் கண்டவர்கள் எண்ணிக்கை 22,802 ஆகப் பதிவானது.

கடந்த இரு ஆண்டுகளில்  கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 40 ஆயிரத்து 235 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :