ECONOMYSELANGOR

லைசென்ஸ் இல்லாத வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை- கிள்ளான் நகராண்மைக் கழகம் எச்சரிக்கை

ஷா ஆலம், பிப் 15- கிள்ளானிலுள்ள காலைச் சந்தைகளில் வணிகம் செய்யும் அந்நிய நாட்டினர் மற்றும் லைசென்ஸ் இன்றி செயல்படும் உள்நாட்டினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிள்ளான் நகராண்மைக் கழகம் எச்சரித்துள்ளது.

லைசென்ஸ் இன்றி செயல்படும் அத்தரப்பினருக்கு எதிரான அமலாக்க நடவடிக்கையை நகராண்மைக் கழகம் தீவிரப்படுத்தவுள்ளதாக அதன் வர்த்தக தொடர்பு பிரிவு இயக்குநர் நோர்பிஸா மாபிஷ் கூறினார்.

அந்நிய நாட்டினருக்கு நகராண்மைக் கழகம் ஒருபோதும் லைசென்ஸ் வழங்கியதில்லை எனக் கூறிய அவர், உரிய அனுமதியுடன் வியாபாரம் செய்யும் வணிகர்களின் உரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபடும் சட்டவிரோத வணிகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆர்வமுள்ளோர் தாராளமாக கிள்ளான் நகராண்மைக் கழகத்திற்கு வந்து லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம். நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படும் என்றார் அவர்.

விதிகளை புறந்தள்ளிவிட்டு விருப்பம் போல் வியாபாரம் செய்வதன் மூலம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முறையாக செயல்படும் லைசென்ஸ் பெற்ற வணிகர்களின் உரிமைகளைப் பறிக்காதீர்கள் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, இவ்விவகாரம் குறித்து கருத்தரைத் நகராண்மைக் கழகத்தின் அமலாக்கப் பிரிவுத் துணை இயக்குநர் ஷாருள் ஹஸ்ரி அப்துல் மஜிட், சட்டவிரோதாமாக வியாபாரம் செய்யும் இவ்விரு தரப்பினருக்கும் எதிராக மார்க்கெட் மற்றும் அங்காடி வியாபார மைய நிர்வாகத்துடன் இணைந்து நகராண்மைக் கழகம் அதிரடிச சோதனையில் ஈடுபடும் என்று சொன்னார்.

 


Pengarang :