ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

50 கம்போங் துங்கு மாணவர்களுக்கு கல்வி உபகரண உதவி

ஷா ஆலம், பிப் 16: பெட்டாலிங் ஜெயாவின் ஸ்ரீ அமான் அடுக்கு மாடியில் வசிக்கும் 50 ஆரம்ப  பள்ளி மாணவர்கள் நேற்று பள்ளி உபகரணங்கள் பெற்றனர். கோவிட்-19 ஆல் இன்னும் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரின் சுமையைக் குறைக்கும் உதவியானது, அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஃபார் தி கிட்ஸ் மற்றும் அங்காத்தான் டெமாக்ரடிக் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது என்று கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

தண்ணீர் குடுவை, உணவு கொள்கலன், எழுதுபொருட்கள், வண்ண பொருட்கள் மற்றும் சானிடைசர் போன்றவை கொடுக்கப்பட்ட பொருட்களில் அடங்கும். இந்த உதவி பெற்றோரின் சுமையைக் குறைக்கும் மற்றும் கல்வியை தொடர்வதில் இளையோர் களுக்கு    உதவும்”     என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது லிம் யி வெய் நம்பிக்கையுடன் கூறினார்.

முன்னதாக, கம்போங் துங்கு சட்டமன்றத்தை சுற்றியுள்ள மக்களுக்கு 2,000 க்கும் மேற்பட்ட உணவு கூடைகள்  விநியோகித்ததாக தெரிவிக்கப்பட்டது. இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) 3.0 க்கு உதவி வழங்கப்பட்டதாகவும், அடிப்படைப் பொருட்களில் இருந்து யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் யி வெய் கூறினார்.


Pengarang :