ECONOMYHEALTHNATIONALSELANGOR

மலேசிய இந்தியச் சமூக மாற்றப் பிரிவின் (மித்ரா) நிதி முறைகேடுகள் தொடர்பில் இரு நபர்கள் மீது நாளை ஈப்போ மற்றும் கோலாலம்பூரில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், பிப் 17: நேற்று மாரா தொடர்பான ‘கார்ப்பரேட் பொறுப்பு மற்றும் நிறுவன ஊழல் எதிர்ப்பு திட்டம்’ குறித்த நிகழ்வில் எஸ்.பி.ஆர்.எம். துணைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அகமது குசைரி யஹாயா மலேசிய இந்தியச் சமூக மாற்றப் பிரிவின் (மித்ரா) நிதி முறைகேடுகள் தொடர்பில் இரண்டு நபர்கள் மீது ஈப்போ மற்றும் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நாளைக் குற்றஞ்சாட்டப்படும் என்று அவர் கூறினார்.

மலேசிய இந்தியச் சமூக மாற்றப் பிரிவின் (மித்ரா) நிதி முறைகேடு குறித்துக் கருத்து தெரிவித்த அகமது குசைரி, இந்த வழக்கு தொடர்பாக எஸ்.பி.ஆர்.எம். நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்ட 27 நிறுவனங்களை விசாரணைக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறினார்.

எஸ்.பி.ஆர்.எம். குறைந்தபட்சம் 10 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக இரண்டு நபர்கள் மீது ஈப்போ மற்றும் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நாளைக் குற்றஞ்சாட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, மித்ரா மீதான விசாரணையில் ஏழு மாநிலங்களில் 22 நபர்களை எஸ்.பி.ஆர்.எம். கைது செய்தது.


Pengarang :