ECONOMYSELANGOR

பழுதுபார்ப்பு பணி நிறைவடைந்தது- கிள்ளான் வட்டாரத்தில் நீர் விநியோகம் மாலை 4.00 மணியளவில் சீரடையும்

ஷா ஆலம், மார்ச் 1- கிள்ளான், தாமான் ஸ்ரீ அண்டலாஸ், ஜாலான் செருலிங் 59 பகுதியில் ஏற்பட்ட குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணி இன்று அதிகாலை 2.00 மணியளவில் முற்று பெற்றது.

இந்தக் குழாய் உடைப்பு காரணமாகப்  பாதிக்கப்பட்ட 11  பகுதிகளில் நீர் விநியோகம் கட்டம் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்று  பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இன்று மாலை 4.00 மணியளவில் நீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பும். பயனீட்டாளர்களின் இருப்பிடம் மற்றும் தொலைவைப்  பொறுத்து நீர் விநியோகம் கிடைக்கும் நேரம் இடத்திற்கு இடம் மாறுபடும் என்று அது மேலும் தெரிவித்தது.

மாற்று நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லோரிகள் மூலம் வழங்கப்படும் நீரைப் பெறும் போது கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது மற்றும் முகக் கவசம் அணிவது போன்ற விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கும்படியும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குழாய்களில் தொடக்கத்தில் வரும் அழுக்கான நீர் முற்றிலும் வெளியேறும் வரை காத்திருந்து பின்னர் வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தும்படியும் அந்நிறுவனம் ஆலோசனை கூறியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகத்தை ஏற்படுத்தும் பணி சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகப் பொதுமக்கள் நீரை விவேகத்துடன் பயன்படுத்தும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Pengarang :