ECONOMYSELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் தடுப்பணை உடைந்தது- குடியிருப்புகளுக்குப் பாதிப்பில்லை

ஷா ஆலம், மார்ச் 3- செக்சன் 25, தாமான் ஸ்ரீமூடாவில் உள்ள மதகு அருகே வெள்ளத் தடுப்பணை உடைந்தது.

நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக இந்த உடைந்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.

நேற்றிரவு 8.15 மணியளவில் பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து சுமார் 14 நிமிடங்களில் தமது துறையினர் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

மாநில வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் ஏற்பாட்டில் மண்வாரி இயந்திரம் வரவழைக்கப்பட்டு உடைந்த தடுப்பணையைச் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தீயணைப்புத் துறை ஐந்து படகுகளை அங்குத் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு 12.00 மணி வரை அங்கு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதுவரை நீர் குடியிருப்பு பகுதிகளில் பெருக்கெடுக்கவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. வடிகால் மற்றும் நீர்ப்பானத் துறையினர் தடுப்பணையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.


Pengarang :