ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,500 ஆக உயர்வு

ஷா ஆலம், மார்ச் 3- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 1,646 அதிகரித்து 27,500 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 25,854 ஆக இருந்தது.

நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 27,072 பேர் உள்நாட்டினராவர். எஞ்சிய 428 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் 26 ஆம் தேதியிலிருந்து 30,000 த்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மொத்தம் 189 பேர் ஒன்றாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 114 பேர் அல்லது 60.32 விழுக்காட்டினர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள் அல்லது  ஊக்கத் தடுப்பூசியைப் பெறாதவர்களாவர். மேலும் 38 பேர் அல்லது 20.11 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தடுப்பூசியை முழுமையாகப் பெறாத மற்றும் இதற்கு முன்னர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்படாதவர்களுக்கு நோய்த் தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

 

பிரிவு வாரியாக கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 9,292 சம்பவங்கள் (33.79 விழுக்காடு)

2 ஆம் பிரிவு- 18,019 சம்பவங்கள் (65.52 விழுக்காடு)

3 ஆம் பிரிவு- 71 சம்பவங்கள் (0.26 விழுக்காடு)

4 ஆம் பிரிவு- 38 சம்பவங்கள் (0.14 விழுக்காடு)

5 ஆம் பிரிவு- 80 சம்பவங்கள் (0.29 விழுக்காடு)


Pengarang :