ECONOMYSELANGOR

எம்.பி.பி.ஜே., எம்.பி.எஸ்.ஜே பேரிடர் நடவடிக்கை அறை திறக்கப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 8- சுபாங் ஜெயா மாநகர் மன்றப் பேரிடர் நடவடிக்கை நேற்று அறை திறக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அறை 24 மணி நேரம் செயல்படும்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இத்தகவலைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றப் பகுதியில் புகார் தெரிவிக்க விரும்புவோர் அல்லது அவசர உதவி தேவைப்படுவோர் 03-80247700 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதனிடையே, டேவான் பிஜேஎஸ் 1/35 மற்று டேவான் பிஜேஎஸ் 2சி/6 இல் தற்காலிக வெள்ள நிவாரண மையம் அமைக்கப்பட்டுள்ளதாகப் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் தனது முகநூல் பதிவில் கூறியது.

பாதிக்கப்பட்டவர்கள் 03-79542020 என்ற 24 மணி நேர அவசரத் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :