ECONOMYHEALTHNATIONAL

ஜோகூர் தேர்தல்- பேச்சாளர்கள் முகக் கவசம் இன்றிப் பரப்புரை நடத்த அனுமதி 

ஜோகூர் பாரு, மார்ச் 8- தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேச்சாளர்கள் முகக் கவசமின்றி  உரை நிகழ்த்துவதற்கு ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான கோவிட்-19 தடுப்பு சீரான செயலாக்க நடைமுறை (எஸ்.ஒ.பி.) அனுமதி வழங்குகிறது.

சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூடுதல் திருத்தங்களின் அடிப்படையில் இந்தப் புதிய எஸ்.ஒ.பி. விதிமுறையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றிய பின்னர்ப் பேச்சாளர்கள் தங்கள் முகக் கவசத்தை மீண்டும் அணிந்து கொள்ள வேண்டும் என்று அந்த எஸ்.ஒ.பி. விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு வருவோர் முகக் கவசங்களை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்பதோடு குறைந்த து ஒரு மீட்டர் அளவுக்குக் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சிக் கூட்டங்களைப் பொறுத்த வரை அனைத்து வருகையாளர்களும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒரு மீட்டர் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். தொடுதல் அறவே அனுமதிக்கப்படாது.

இந்த புதிய கோவிட்-19 தடுப்பு எஸ்.ஒ.பி. உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் கூறியது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடக்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அது தெரிவித்தது.


Pengarang :