ALAM SEKITAR & CUACASELANGOR

அடைமழையின் எதிரொலி – மாநகரின்  29 இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின

ஷா ஆலம், மார்ச் 8- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நேற்று மாலை பெய்த அடை மழை காரணமாகக் கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்திலுள்ள 29 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

எனினும், 25 இடங்களில் வெள்ளம் 30 முதல் 45 நிமிடங்களில் வடிந்த நிலையில் நான்கு இடங்களில் ஒன்று முதல் மூன்று மணி நேரத்தில் நீர் முற்றாக வடிந்ததாகக் கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ மஹாடி சே ஙா கூறினார்.

இங்குள்ள சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்ட தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் 145 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர் தங்க வைக்கப்பட்ட வேளையில் டேவான் சுல்தான் சுலைமானில் கம்போங் பெரியோக்கை சேர்ந்த 128 பேர் தங்க வைக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

இந்த அடை மழை காரணமாக ஜாலான் கூச்சாய் லாமாவிலுள் ஜாலான் கெம்பீரா, வங்சா மாஜூ செக்சன் 6, சாலாக் செலாத்தான், ஜாலான் ஹாங் துவா 4 ஆகிய இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதாகவும் அப்பகுதிகளில் சீரமைப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :