ECONOMYHEALTHNATIONALPBT

ஏப்ரல் 1 முதல் மலேசியாவில் 17 வயதுக்குட்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.

ஷா ஆலம், மார்ச் 9: 17 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் இளைஞர்கள், ஏப்ரல் 1 முதல் மலேசியாவிற்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்டவர்கள் மலேசியாவிற்கு வந்தவுடன் விரைவான ஆன்டிஜென் சோதனையை (RTK-Ag) மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

“இருப்பினும், தடுப்பூசி முழுமையாகப் பெறாதவர்கள் அல்லது தடுப்பூசி போடப்படாதவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும், மலேசியா நிர்ணயித்த நிபந்தனைகளுக்கு இணங்கக் கூடுதலாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்,” என்று இன்று அவர் ஒரு சுகாதார அமைச்சகம் (MOH) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி எண்டமிக்  நிலைக்கு நகர்ந்துவிட்டால், தொற்றுநோய் நிலைக்குத் திரும்ப அரசாங்கம் திட்டமிடவில்லை என்றும் கைரி விளக்கினார்.

“இருப்பினும், பாதுகாப்பான தொற்று நோய்க் கட்டுப்பாட்டு கொள்கையை ஏற்றுக்கொண்டு பொதுச் சுகாதாரத்தைப் பேணுகின்ற சுகாதார அமைச்சு என்ற வகையில், எந்தவொரு நிகழ்விற்கும் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்றார்.


Pengarang :