ECONOMYSELANGOR

குழாய் உடைப்பு- 13 இடங்களில் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர், மார்ச் 11- ஜாலான் குவாரி, கம்போங் செராஸ் பாருவில் நேற்றிரவு   8.45 மணியளவில் ஏற்பட்ட  குழாய் உடைப்பைச் சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படுவதைத் தொடர்ந்து தலைநகரைச் சுற்றியுள்ள 13 பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது

இந்த நீர் விநியோகத் தடையினால் தாமான் மூடா, தாமான் புக்கிட் பெர்மாய், தாமான் புக்கிட் பாண்டன், கம்போங் செராஸ் பாரு, தாமான் மாவார், தாமான் செராயா, தாமான் மெகா, தாமான் புக்கிட் தெராத்தாய், தாமான் மெலூர், தாமான் சாகா, தாமான் புத்ரா, தாமான் மேவா மற்றும் தாமான் மஸ்திக்கா ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புப் பிரிவுத் தலைவர் எலினா பஸேரி தெரிவித்தார்.

உடைந்த குழாயைப் பழுது பார்க்கும் பணி இன்று காலை 8.45 மணிக்கு நிறைவடையும் எனக் கூறிய அவர், அதன் பின்னர்ப் பயனீட்டாளர்களுக்கு  நீர் விநியோகம் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்த திட்டமிடப்படாத நீர் விநியோக இடையூறு காலத்தில் முக்கியமான இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொள்கலன் லாரிகள் மூலம் நீர் விநியோகம் வழங்கப்படும்  என்று அவர் கூறினார்.

லாரிகளில்  மூலம் தண்ணீர்  விநியோகத்தைப் பெறும்போது கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கும் அதேவேளையில் முகக் கவசம் அணிந்திருக்கும் வேண்டும் என்றும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :