ECONOMYHEALTHNATIONAL

91.1 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 11– நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில்   28 லட்சத்து 34 ஆயிரத்து 807 பேர்  அல்லது  91.1 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 29 லட்சத்து 34 ஆயிரத்து 891 பேர் அல்லது  94.3 விழுக்காட்டினருக்குக்  குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களில்  10 லட்சத்து 97 ஆயிரத்து 425 பேர் அல்லது 30.9 விழுக்காட்டினர்  பிக்கிட்ஸ் எனப்படும் தேசியக் கோவிட்-19  தடுப்பூசித் திட்டத்தின் கீழ் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

பெரியவர்களைப் பொறுத்தவரை மொத்தம் 1 கோடியே 52 லட்சத்து 02 ஆயிரத்து 158 பேர்  அல்லது 64.6  விழுக்காட்டினர்  பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனர்.

அதே நேரத்தில்,  2 கோடியே 29 லட்சத்து 32 ஆயிரத்து 696 பேர் அல்லது 97.5 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்ட வேளையில் 2 கோடியே 32 லட்சத்து 9 ஆயிரத்து 327 பேர் அல்லது 984 விழுக்காட்டினர்  குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றனர்.

நேற்று  64, 759 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 20,178 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,736 இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும்  42,845 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் அகப்பக்கத் தகவலின்படி கோவிட்-19 காரணமாக நேற்று 70 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.


Pengarang :