ECONOMYHEALTHNATIONAL

குடிநீர் தரச் சட்டத்தை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தும்- அமைச்சர் கைரி தகவல்

புத்ராஜெயா, ஏப் 7 – பாதுகாப்பற்ற குடிநீரால் ஏற்படும் உடல்நலப் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக  குடிநீர் தரச் சட்டத்தை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு  திட்டமிட்டுள்ளது.

குடிநீர் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். உலகில் மூவரில் ஒருவருக்கு பாதுகாப்பான மற்றும் போதுமான நீர் கிடைக்கவில்லை  என்று இன்று அனுசரிக்கப்படும் 2022 ஆம் ஆண்டு உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட நிகழ்வில் அவர் தெரிவித்தார்.

நாட்டின் மிகப் பழமையான சுற்றுச்சூழல் சுகாதாரத் திட்டங்களில் ஒன்றான கிராமப்புற சுற்றுச்சூழல் சுகாதாரத் திட்டத்தை பாக்காஸ் எனப்படும் நீர் விநியோகம் மற்றும் சுற்றுச்சூழல் துப்புரவு பிரிவின் வாயிலாக சுகாதார அமைச்சு கடந்த 50 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இது, கிராமப்புற மக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீரை வழங்குவதில் பெரும் பங்காற்றுவதோடு ஏறக்குறைய நாடு முழுவதும் பாதுகாப்பான மற்றும் சுத்தமான நீர் விநியோகிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது என்று அவர் சொன்னார்.

தேசிய குடிநீர் தர கண்காணிப்பு திட்டத்தை  செயல்படுத்தும் அதேவேளையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் பாதுகாப்பை உறுதிசெய்வது  தரத்தை கண்காணிப்பது,  நீரினால் பரவும் நோய்களின் தாக்கத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்களின் சுகாதாரத் தரத்தை உயர்த்த  சுகாதார அமைச்சு உதவியுள்ளது என்றார் அவர்.

குடிநீரின் தரம் பாதிக்கப்படும் பட்சத்தில் நீர் விஷத்தன்மை உள்ளிட்ட பெரும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் தடுப்பு நடவடிக்கைகளை பொது சுகாதார மற்றும் நீர் விநியோகப் பணியாளர்கள் மேற்கொள்ள இந்த கண்காணிப்பு திட்டம் துணை புரியும் அவர் அவர் தெரிவித்தார்.


Pengarang :