ECONOMYSELANGOR

சுங்கை பீலேக் தொகுதியில் 550 பேருக்கு நோன்பு பெருநாள் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், ஏப் 12- சுங்கை பீலேக் தொகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த 550 பேருக்கு  நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்த பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு கூறினார். சம்பந்தப்பட்டவர்கள்  சுங்கை பீலேக், ஜி.எல்.சி. பேரங்காடியில் அந்த பற்றுச் சீட்டைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் சிரமத்தை குறைப்பதில் மாநில அரசின் இந்த உதவித் திட்டம் ஓரளவு துணை புரியும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்புக் கஞ்சி வழங்கும் நிகழ்வு தொகுதி ஏற்பாட்டில் இவ்வாண்டும் நடைபெறுவதாக அவர் சொன்னார்.

வட்டார மக்களின் ஒத்துழைப்புடன் கூட்டு முறையில் 500 பொட்டலங்களில் நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு மூன்று பகுதிகளில் விநியோகிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும்  பி40 தரப்பினரின் நலனைக் காக்கும் விதமாக இந்த ஜோம் ஷோப்பிங் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


Pengarang :