ECONOMYSELANGOR

நோன்பு மாதத்தில் உதவித் திட்டங்களை மேற்கொள்ள  சிகிஞ்சான் தொகுதி வெ. 50,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஏப் 12– ரமலான் மாதம் முழுவதும் பல்வேறு உதவித் திட்டங்களை  மேற்கொள்வதற்காக சிகிஞ்சான் தொகுதி 50,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பத்தினரின் வீடுகளுக்கு வருகை புரிவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.

சிகிஞ்சான் மற்றும் தஞ்சோங் காராங் தொகுதியிலுள்ள 100 வீடுகளுக்கு இது வரை நாங்கள் வருகை மேற்கொண்டுள்ளோம். அக்குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் நோன்பு பெருநாள் உதவிப் பொருள்களும் பண உதவியும் வழங்கினோம் என சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

அதோ மட்டுமின்றி, நோன்பு பெருநாளுக்காக 1,500 பேரீச்சம்பழ பாக்கெட்டுகளை தாங்கள் ஏற்பாடு ரமலான் சந்தைகளில் விநியோகிப்பதற்காக 2,000 பொட்டலங்களில் நோன்பு கஞ்சியை தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பொருள்கள் யாவும் ஒவ்வொரு சனிக்கிழமையும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரமலான் சந்தைகளில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :