ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று- 6,069 பேர் பாதிக்கப்பட்டனர், 10,619 பேர் குணமடைந்தனர்

கோலாலம்பூர், ஏப் 20- நாட்டில்  கோவிட்- 19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 10,619 ஆகப் பதிவானது. இதனுடன் சேர்ந்து அந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 74 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த் தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 6,069 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று பதிவான புதிய சம்பவங்களுடன் சேர்த்து நாட்டில் நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 2 ஆயிரத்து 234 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

புதிதாக அடையாளம் பாதிக்கப்பட்ட 6,069 பேரில் 5,959 பேர் அல்லது 96.4 விழுக்காட்டினர் உள்நாட்டினர் என்றும் எஞ்சிய 3.6 விழுக்காட்டினர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

மொத்தம் 241 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவர்களில் 97 பேர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் 144 பேர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளனர் என்றார்.

அனைத்து மாநிலங்களிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :