ECONOMYHEALTHNATIONAL

கை,கால்,வாய்ப் புண் நோயினால் நோயினால் சிலாங்கூரில் 4,383 பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஏப் 22– சிலாங்கூரில் இதுவரை 4,383 பேர் கை,கால், வாய்ப் புண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர்  டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் கூறினார்.

இந்நோய்த் தொடர்புடைய 103 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 497 சம்பவங்கள் அல்லது 95 விழுக்காடு பாலர் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களை சம்பந்தப்படுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இந்நோய் பெரும்பாலும் ஏழு வயதுக்கும் குறைவானோரை பீடிப்பதாக கூறிய அவர், இதுவரை இந்நோய்த் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை என்றார்.

கை,கால்,வாய்ப் புண் நோயின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறிப்பாக குழந்தை பராமரிப்பு இல்லங்களை நடத்துவோர் சுத்தத்தை பேண வேண்டும்.

அம்மையங்களில் உள்ள தரை, கழிப்பறை மற்றும் அச்சிறார்கள் பயன்படுத்தும் பொருள்கள் எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தங்கள் பிள்ளைகளுக்கு இந்நோய்க்கான அறிகுறி இருக்கும் பட்சத்தில் அவர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்பதோடு அவர்களின் கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவும்படி பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :