ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 3,361 ஆக உயர்வு

ஷா ஆலம், ஏப் 27-  நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 3,361 ஆக உயர்வு கண்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 2,478 ஆக இருந்தது.

நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேர் அல்லது 0.89 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்டிருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எஞ்சிய 3,331 பேர் அல்லது  99.11 விழுக்காட்டினர் லேசான தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்ட 30 நோயாளிகளில் 17 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவளாக உள்ள வேளையில் 16 பேர்  60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

இதுதவிர, அவர்களில் 16 பேர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள். மேலும் 14 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கின்றனர் என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

நேற்று பதிவான நோய்த் தொற்றுகளுடன் சேர்த்து இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 44 லட்சத்து 36 ஆயிரத்து 912 ஆக உயர்ந்துள்ள வேளையில் 61,871 நோயாளிகள் தீவிர நோய்த் தாக்கத்தைக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

நேற்று மொத்தம் 9,484 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதன் வழி இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 39 ஆயிரத்து 521 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக வருமாறு-

பிரிவு 1- 1,256 சம்பவங்கள் ( 37.37 விழுக்காடு)

பிரிவு 2- 2,075 சம்பவங்கள் (61.74 விழுக்காடு)

பிரிவு 3- 11 சம்பவங்கள் (0.33 விழுக்காடு)

பிரிவு 4- 4 சம்பவங்கள் (0.11 விழுக்காடு)

பிரிவு 5- 15 சம்பவங்கள் (0.45 விழுக்காடு)


Pengarang :