ECONOMYNATIONAL

மே 1 முதல் முகக் கவரி அணிவது கட்டாயமே- மைசெஜாத்ராவில் ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை

ஷா ஆலம், ஏப் 27- பேரங்காடிகள் போன்ற மூடப்பட்ட இடங்களில் இருக்கும் போதும் கிராப் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் போதும் கட்டாயம் முகக் கவரி அணிந்திருக்க வேண்டும்.

எனினும், திறந்த வெளிகளில் இருக்கும் போது விருப்பத்தைப் பொறுத்து அந்த சுவாச பாதுகாப்பு கவரியை அணியலாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

பொதுமக்களை குறிப்பாக நோய்த் தொற்றுக்கான சாத்தியம் உள்ளவர்களை பாதுகாப்பதற்கு கட்டிடங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் இருக்கும் போது முகக் கவரி அணிவது அவசியம் என்று இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மேலும் வரும் மே முதல் தேதி தொடங்கி பொது இடங்கள் மற்றும் கட்டிடங்களில் நுழையும் போது மைசெஜாத்ரா செயலியில் ஸ்கேன்  செய்வது கட்டாயமில்லை என்றும் அவர் சொன்னார்.

இது தவிர அனைத்து நடவடிக்கைகளும் வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி முழு அளவில் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பொது இடங்களில் தனி நபர் அல்லது கூட்டத்தினர் மத்தியில் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது அவசியமில்லை. அதே சமயம் பெரும் எண்ணிக்கையிலானோர் முகக் கவரி அணியாமலிருக்கும் இடங்களில் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.


Pengarang :