ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

மைசெஜாத்ரா செயலியில் நோய்களைக் கண்டறியும் புதிய அம்சம்- அமைச்சர் கைரி தகவல்

கோலாலம்பூர், மே 4- கை,கால், வாய்ப்பு புண் நோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் இடங்களை கண்டறியக்கூடிய புதிய அம்சங்களை இணைக்கும்  வகையில் மைசெஜாத்ரா செயலி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தொற்று நோய் கண்காணிப்பு என அழைக்கப்படும் இந்த புதிய அம்சம் கோவிட்-19 நோய்த் தொற்று தவிர்த்து தட்டம்மை, நெறிநாய்க்கடி, கை,கால், வாய்ப்புண் நோய், டிங்கி நோன்ற நோய்கள் அதிகம் பரவும் இடங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பினை வழங்குகிறது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

தரம் உயர்த்தப்பட்ட புதிய மைசெஜாத்ரா செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. கை,கால், வாய்ப்புண் நோய் போன்ற தொற்று நோய்கள் பரவும் இடங்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என அவர் சொன்னார்.

முன்பு கோவிட்-19 நோய்ப் பரவல் இடங்களை அடையாளம் காண்பதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட மைசெஜாத்ரா செயலியின் அம்சம் இனி தொற்று நோய்களை அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் கைரி முன்னதாக கூறியிருந்தார்.

இதனிடையே, மூடப்பட்ட அல்லது ஜனநெருக்கடி அதிகம் உள்ள இடங்களில் தொடர்ந்து முக க்கவசம் அணிந்து வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்


Pengarang :