ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

நெடுஞ்சாலையின் வடக்கு-தெற்கு தடங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப் 4- நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளின் வடக்கு-தெற்கு தடங்களில் நேற்று வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்னும் பலர் சொத்த ஊர்களுக்குச் செல்லும் மற்றும் வீடு திரும்பும் காரணத்தால்  நெடுஞ்சாலைகளில் வாகனப்போக்குவரத்து அதிகரித்து காணப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

நேற்றிரவு 10.30 மணி நிலவரப்படி வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தாப்பா முதல் கோப்பிங் வரையிலானப் பகுதியிலும் ஈப்போ முதல் சங்காட் ஜெரிங் வரையிலானப் பகுதியிலும் அலோர் பொங்சு முதல் ஜாவி வரையிலானப் பகுதியிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

இதுதவிர, பெடாஸ் லிங்கி-போர்ட்டிக்சன் மற்றும் பண்டார் அய்ஸ்லெண்ட்-சிரம்பான் ஓய்வுப் பகுதி வரை நெரிசல் காணப்பட்டது என்றார் அவர்.

தெற்கு நோக்கிச் செல்லும் தடத்திலும்  கெடா மற்றும் பேராக்கின் பல்வேறு பகுதிகளில் வாகன எண்ணிக்கை உயர்ந்து காணப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

கிழக்குக் கரை நெடுஞ்சாலைமைப் பொறுத்த வரை கோம்பாக் டோல் சாவடியின் தலைநகர் நோக்கிச் செல்லும் பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது என்றார் அவர்.

Pengarang :