ECONOMYSELANGORSENI

இந்த சனிக்கிழமை மோரிப் கடற்கரையில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சி

ஷா ஆலம், மே 5: இந்த சனிக்கிழமை கோலா லங்காட்டில் உள்ள டத்தாரான் பந்தாய் மோரிப்பில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இந்திய கலை, கலாசார நிகழ்வும் அடங்கும்.

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான நிகழ்ச்சியில் கலாச்சாரத்தை மதித்து வளர்க்கும்  பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள் உள்ளதாக மோரிப் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் பஹாருதீன் கூறினார்.

“குழந்தைகளுக்கு ஏற்ற மற்ற நிகழ்ச்சிகளுடன் இந்திய இசைக்கருவிகளின் இசைக்கப்படும்.

“மாநில அரசின் நோக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, கலாச்சார நிகழ்வுகளை  இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதன் வழி அவர்களிடையே  பண்பாடு, கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம்” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாட படவிருக்கும் அன்னையர் தினத்தை  முன்னிட்டு  நிகழ்ச்சிக்கு  வரும் முதல் 100 பார்வையாளர்களுக்கு நினைவு பரிசுகளை சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் இருக்கும் ஹஸ்னுல் வழங்குவார்.

இந்த சித்திரை புத்தாண்டு விழாவிற்கு மக்கள் வருகை தந்து சிறப்பிக்க அழைக்கிறோம்,” என்றார்.


Pengarang :