ECONOMYNATIONAL

கிள்ளான்-தெலுக் இந்தான் சாலையில் நெரிசல்: மாற்று வழியைப் பயன்படுத்த ஆலோசனை

ஷா ஆலம், மே 6-– ஜாலான் கிள்ளான் – தெலுக் இந்தான் வழித்தடத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு காலை 8.00 மணி முதல் நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், மாற்று வழிகளைப் பயன்படுத்தத் திட்டமிடுமாறு வாகன மோட்டிகளுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கிள்ளான் நகரிலிருந்து தெலுக் இந்தான் நோக்கி செல்லும் வாகனமோட்டிகள் ரூட் 54 எனப்படும் ஜாலான் கிளப் கோல்ஃப், ஜாலான் கோல சிலாங்கூர்-ரவாங், ஜாலான் கம்போங் ஹாங் துவா, ஜாலான் தீமோர் தம்பஹான் மற்றும் புக்கிட் தாகார் ஆகிய வழிகளைப் பயன்படுத்தலாம் என்று கோல சிலாங்கூர் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமது அம்பியா நோர்டின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.

தெலுக் இந்தானிலிருந்து கிள்ளான் வரையிலான சாலையைப் பயன்படுத்துவோர் ஜாலான் பாரிட் 4-ஜாலான் தெருசன் உத்தாமா, ஜாலான் தஞ்சோங் காராங்-ரவாங், ஜாலான் ராஜா மூசா, ஜாலான் கோல சிலாங்கூர்-ரவாங், ஈஜோக் மற்றும் மேரு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :