ECONOMYNATIONAL

மே 12 அன்று மேர்டிக் கோலாலம்பூரில் அன்வார்-நஜிப் விவாதம்

ஷா ஆலம், மே 6: எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கும் இடையிலான  பொது விவாதம் வரும் மே மாதம் 12 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள மலேசியச் சுற்றுலாத் தகவல் வளாகத்தில் (மேர்டிக்) நடைபெறும்.

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அலுவலகங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையின் மூலம், இரு கட்சிகளும் கலந்து பேசி இந்த  இடம் தேர்வு செய்யப்பட்டது.

விவாதம்  அன்று  இரவு 9 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி  தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு குறித்துப்  பின்னர் அறிவிக்கப்படும். முன்னதாக, கெஅடிலான் உதவித் தலைவர் ரஃபிசி ரம்லி, சபுரா சினெர்ஜி பிரச்சினையில் விவாதம் செய்ய நஜிபிற்குச் சவால் விடுத்தார்.

சபுரா  சினெர்ஜி  நிறுவனம் RM800 கோடிக்கும் அதிகமான இழப்பை சந்தித்தும் அதன் தலைமைச் செயல் அதிகாரிக்கு  பெரிய தொகை சம்பளமாக வழங்குவது பரவலாக மக்கள் கண்டனத்தைப்  பெற்றது.  அப்படிப்பட்ட நிறுவனத்தை அரசாங்கம் பிணையில் விடுவிக்க மாபெரும் நிதி மோசடி 1எம்டிபி வழக்கின் நாயகன் நஜிப், அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்தச் சவால் விடுக்கப்பட்டது.

நஜிப் பின்னர் ரஃபிசியின் சவாலை ஏற்றுக் கொண்டார், ஆனால் அன்வாரும் விவாதத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று நஜிப் துன் ரசாக் விடுத்த எதிர் சவாலை ஏற்றுக் கொண்டதன் விளைவாக இந்த விவாதம் நடைபெறுகிறது.


Pengarang :