MEDIA STATEMENT

நான்கு வயது சிறுவனைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதி மீதான வழக்கு ஜூன் 21ல்

கூச்சிங், மே 9 – நான்கு வயது சிறுவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட திருமணமான தம்பதிகள் தொடர்பான வழக்கை ஜூன் 21-ஆம் தேதி  செவிமடுக்க   மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கீழ் கோர்ட் உதவிப் பதிவாளர் டோரா உண்டாவ், நிலுவையிலிருந்த  வேதியியலாளர் அறிக்கை கிடைத்துள்ளதால் அரசுத் தரப்பு விண்ணப்பத்தை ஏற்று இன்று வழக்கு  தேதியை நிர்ணயித்தார்.

ஏரிக் சாங் வெய் ஜிவ் என்ற சிறுவனின் பாதுகாவலர்களாக லிங் கோக் லியாங், 51, மற்றும் மனைவி வெண்டி சாய் சூ ஜென், 36, தம்பதியினர், கூச்சிங்கில் உள்ள எண் 1493, லோரோங் 2, தாமான் ரிவர்வியூ, ஜாலான் டாயா, பிந்தாவா, என்ற முகவரியில் அச்சிறுவனைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை வழங்கப்படும்.

வழக்கு விசாரணையை துணை அரசு வழக்கறிஞர் டான் சுவான் யீ நடத்தினார், அதே நேரத்தில் தம்பதியினர் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.


Pengarang :