ECONOMYSELANGOR

சிலாங்கூர் அரசின் விசாக தினக் கொண்டாட்டம் மே 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறும்

ஷா ஆலம், மே 9- சிலாங்கூர் மாநில நிலையிலான விசாக தினக் கொண்டாட்டம் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் கோல லங்காட், ஜென்ஜாரோம், ஜாலான் சுங்கை புவாயா ஃபூ குவாங் ஷான் டோங் ஸென் சீன ஆலயத்தில் நடைபெறும்.

இந்த விழாவில் சுமார் ஐயாயிரம் பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக பௌத்தம், கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமயங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாம் கிம் கூறினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மாநில நிலையில் கொண்டாடப்பட்டு வந்த இந்த விசாக தின விழா, கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தடைபட்டதாக அவர் சொன்னார்.

மலேசியாவில் விசாக தினத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இவ்வாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விழாவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொடக்கி வைப்பார். இந்நிகழ்வில் சீனா, ஐக்கிய அரபு சிற்றரசு, பாகிஸ்தான் மற்றும் இலங்கைத் தூதர்களும் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :