ALAM SEKITAR & CUACANATIONAL

உலு சிலாங்கூரில் இன்று இரவு வரை கனமழை

ஷா ஆலம், மே 10 – உலு சிலாங்கூரில் இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

கெடாவில் (லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், யான், பெண்டாங், கோலா மூடா, சிக் மற்றும் பாலிங்), பேராக்கில் (லாரூட், மாத்தாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோலா கங்சார், கிந்தா, கம்பார், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம்), கிளந்தானில் (ஜெலி, மாச்சாங், பாசிர் பூத்தே மற்றும் கோலா கிராய்), திரங்கானுவில் (பெசூட் மற்றும் செத்தியு) போன்ற பல பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை ஏற்படும் என பிற்பகல் 3.45 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பகாங் (கேமரன் மலை, லிபிஸ், ரவூப், பெந்தோங், குவாந்தான், பெக்கன் மற்றும் ரொம்பின்), ஜோகூர் (குளுவாங், மெர்சிங், பொந்தியன், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு) மற்றும் சபா: உட்புறம் (சிபிதாங், தெனோம் மற்றும் தம்புனன்), மேற்கு கடற்கரை, சண்டகன் (தெலுபிட், கினாபதங்கன், பெலூரன் மற்றும் சண்டகன்) மற்றும் குடாட் ஆகிய இடங்களிலும் சீரற்ற வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மிமீ/ மணி நேரம்) அதிகமாக இருக்கும் என எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்கும்.


Pengarang :