ECONOMYSELANGOR

பூச்சோங் ஜெயாவில்  சாலை சந்திப்பை மேம்படுத்தி  போக்குவரத்து நெரிசலுக்கு  நிவாரணம்

சுபாங் ஜெயா, மே 14: இங்குள்ள பண்டார் பூச்சோங் ஜெயாவில் உள்ள இரண்டு உள்கட்டமைப்புத் திட்டங்கள் 10,000 வீடுகளில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.

கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கருத்துப்படி, RM400,000 செலவில் ஜாலான் பிபிட் மற்றும் ஜாலான் மெர்புக் இடையேயான சாலை சந்திப்பை மேம்படுத்துவது இந்தத் திட்டத்தில் அடங்கும்.

இதற்கிடையில்,மற்றொரு திட்டம் புக்கிட் தன்டாங்கிலிருந்து பூச்சோங் ஜெயா வரையிலான 500 மீட்டர் போக்குவரத்து கட்டுமானம் RM3 கோடி மதிப்பில் கட்டமைக்கப்படவுள்ளது.

இன்று போக்குவரத்து கட்டுமானத்தை ஆய்வு செய்த அவர், “இந்த இரண்டு திட்டங்களும் 80 விழுக்காடு வரை போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்க உதவும்,” என்றார்.

குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களுக்கு சுபாங் ஜெயா நகர சபை நிதியளித்ததாக அவர் விளக்கினார்.


Pengarang :