ECONOMYHEALTHNATIONAL

கை, கால் மற்றும் வாய் நோய்த்தொற்றுகள் 20 மடங்கு உயர்ந்தது

ஷா ஆலம், மே 24: கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) எனப்படும் தோய்த்தொற்று மொத்தம் 47,209 சம்பவங்கள் மே 21 ஆம் தேதி வரை பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 20 மடங்கு அதிகமாகும்.

ஹரி ராயா பெருநாள் கொண்டாட்டத்தின் போது பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்ததன்  காரணமாக இது எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூரில் 13,640 சம்பவங்கள் (28.9 விழுக்காடு), கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா 6,206 சம்பவங்கள் (13.1 விழுக்காடு) மற்றும் பேராக் 4,099 சம்பவங்கள் (8.7 விழுக்காடு) ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் சம்பவங்கள் உள்ளன.

கிளாந்தானில் 3,726 சம்பவங்கள் (7.9 விழுக்காடு), சபாவில் 3,352 சம்பவங்கள் (7.1 விழுக்காடு), மற்ற மாநிலங்களில் சுமார் 2,500 அல்லது அதற்கும் குறைவான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

” சிறுவர்களிடையே ஆறு வயது மற்றும் அதற்குக் கீழே 43,736 சம்பவங்கள் (93 விழுக்காடு), ஏழு முதல் 12 வயது வரையிலான குழு 2,765 சம்பவங்கள் (6 விழுக்காடு).

“மற்றவர்கள் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், 696 சம்பவங்கள்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா 413, சிலாங்கூர் (143) மற்றும் பேராக் (130) ஆகிய மூன்று மாநிலங்களில் மொத்தம் 1,168 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

மழலையர் பள்ளி மற்றும் பாலர் பள்ளிகளில் மொத்தம் 711 சம்பவங்கள் நிகழ்ந்தன, தனியார் வீடுகள் (407) மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் (42).


Pengarang :