MEDIA STATEMENTNATIONAL

மலேசியாவில் பிறந்த மூன்றாவது பண்டா குட்டிக்கு ஷெங் யீ என பெயர் சூட்டப்பட்டுள்ளது

கோலாலம்பூர், மே 25 – பிறந்து ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு, சீனாவைச் சேர்ந்த பண்டா தம்பதிகளான ஜிங் ஜிங் மற்றும் லியாங் லியாங்கின் மூன்றாவது குட்டிக்கு இறுதியாக அமைதி மற்றும் நட்பு என்று பொருள்படும் ஷெங் யீ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 31ஆம் தேதி சுமார் 140 கிராம் எடையுடன் பிறந்த பெண் குட்டி, தற்போது 27 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தாகியுடின் ஹாசன் தெரிவித்தார்.

“மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இருக்கும் நட்பை ஷெங் யீ மேலும் அதிகரிக்க முடியும் என்று மலேசிய அரசாங்கம் நம்புகிறது,” என்று அவர் இன்று பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஒரு அறிக்கையில் கூறினார்.

ஷெங் யீ டிசம்பர் 2021 முதல் பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

தேசிய மிருகக்காட்சிசாலை துணைத் தலைவர் ரோஸ்லி @ ரஹ்மாட் அமாட் லானா ஏப்ரல் மாதம், யீ யீயை சீனாவுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான அரசாங்கத்தின் அனுமதிக்காக உயிரியல் பூங்கா நெகாரா இன்னும் காத்திருப்பதாகக் கூறினார்.

முன்னாள் எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசரா, டிசம்பர் 2, 2020 அன்று வெளியிட்ட அறிக்கையில், பண்டா தம்பதியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு குட்டியும் குறைந்தபட்சம் 24 மாதங்களுக்குள் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் நான்கு வயதுக்கு மேல் அல்ல என்றும் கூறியிருந்தார்.


Pengarang :