HEALTHMEDIA STATEMENT

“சிலாங்கூர் சாரிங்“ திட்டம் என்னும் அரசின் மருத்துவப் பரிசோதனை திட்டம்

“சிலாங்கூர் சாரிங்“ திட்டம்

“சிலாங்கூர் சாரிங்“ என்பது மாநிலத்திலுள்ள மக்களுக்கு புற்றுநோய், கண் நோய், தொற்றா நோய்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறி உள்ளதா என்பதை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட சுகாதாரப் பரிசோதனைத் திட்டமாகும். 

சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்துவதன் மூலம் செலங்கா (Selangkah) செயலியில் பதிவு செய்யவும்

பதிவு செய்யும் நடைமுறையின் போது உங்கள் அடையாளத்தை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் கீழ்க் கண்ட வழிமுறைகளில் ஒன்றைப் பின்பற்றலாம்.

  • மீண்டும் முயற்சி செய்யவும்
  • அடையாளத்தை உறுதி செய்யாமல் தொடரவும்
  • சிலாங்கூர் சாரிங் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்யவும் (selangorsaring.selangakah.my )

முக்கிய நினைவூட்டல்

  1. பரிசோதனைக் கோட்டா வரையறைக்குட்பட்டது விண்ணப்பிக்கும் செய்யும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் பதிவின் போது கேட்கப்பட்ட தொடக்க சோதனைக்கான கேள்விகளின் அடிப்படையில் சோதனைக்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
  2. அடையாளத்தை உறுதி செய்ய இயலாது போனால், இலவச பரிசோதனை தினத்தன்று மைகார்டுடன் நேரில் வந்து முகப்பிடங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
  3. இலவச மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடங்களுக்கு வருவதற்கு முன்னர் சங்கேத குறியீட்டை “ஸ்க்ரின்ஷாட்“ செய்து கொள்ளவும்.
  4. ஆண்ட்ரோய்ட் கைப்பேசி வைத்திருப்போர் சீரான சேவையைப் பெறுவதற்கு ஏதுவாக கூகுள் பிளே ஸ்டோரில் செலங்கா செயலியை புதுப்பித்துக் கொள்ளவும்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்டத் தரப்பினர்

நோய்க்கான ஆபத்துகள் கொண்டவர்கள் (குடும்ப நோய்ப் பின்னணி, உடல் பருமன், வாழ்க்கை முறை மற்றும் பிற), எந்த மருத்துவமனையிலும் நோய் உறுதி செய்யப்படாதவர்கள் உள்ளிட்ட எல்லா வயதுடைய சிலாங்கூர் மக்கள் அனைவரும் இந்த பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்கலாம்.

தேதி மற்றும் இடம் தொடர்பான பட்டியல்

மாவட்டம்             தேதி          தொகுதி          இடம்

 

இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் பின்வருமாறு

பொதுவான உடல் சோதனை

இரத்த சோதனை

சிறுநீர் சோதனை

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ச் சோதனை

சுய மலப் பரிசோதனை

மார்பகப் புற்று நோய் சோதனை

வழங்கப்படும் நோய்க்கான பரிசோதனைகள் வருமாறு-

பிரிவு ஏ- தொற்றா நோய்கள்

  1. இருதயம்
  2. இரத்த அழுத்தம்
  3. நீரிழிவு
  4. சிறுநீரகம்

பிரிவு பி- புற்றுநோய்

  1. பெருங்குடல்
  2. புரோஸ்டெட்
  3. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

4- மார்பக புற்று நோய்

பிரிவு சி- கண் சோதனை

  1. பார்வை குறைபாடு
  2. கண் அழுத்த நோய் (குளுகோமா)
  3. விழித்திரை சோதனை (ரெட்டினா)

 

கேள்விகள் ஏதும் உண்டா?

இந்த சோதனை தொடர்பில் கேள்விகள் ஏதும் இருந்தால் கீழ்க்கண்ட வழிகளில் தொடர்பு கொள்ளலாம்

  • செல்கேர் ஹோட்லைன் 1-800-22-6600

– செலங்கா பயனீட்டாளர் நுட்ப சேவை இணைப்பு (Telegram)

– சுக்கா ஹோட்லைன் – சுக்கா (SUKA)

வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்

கேள்வி- சிலாங்கூர் சாரிங் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பம் செய்வது?

பதில்- விண்ணப்பங்களை செலங்கா செயலி வாயிலாக மட்டுமே செய்ய முடியும்.

கே- ஏன் சிலாங்கூர் சாரிங் திட்டம் உருவாக்கப்பட்டது?

பதில்- சிலாங்கூர் மக்களுக்கு முறையான சுகாதாரச் சோதனைக்கான வழிமுறையை ஏற்படுத்தும் நோக்கில் சிலாங்கூர் சாரிங் திட்டம் உருவாக்கப்பட்டது.

கேள்வி- சிலாங்கூர் சாரிங் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து எவ்வாறு அறிந்து கொள்வது?

பதில்- பதிவின் போது வழங்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு சோதனைக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

கேள்வி- இந்த சிலாங்கூர் சாரிங் திட்டம் இலவமானதா? அல்லது கட்டணம் செலுத்த வேண்டுமா?

பதில் நிர்ணயிக்கப்பட்ட தகுதி அடிப்படையில் இந்த சிலாங்கூர் சாரிங் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

கேள்வி- சிலாங்கூர் சாரிங் திட்டத்திற்கான கூப்பனை நான் எவ்வாறு பெறுவது?

பதில்- செலங்கா செயலியின் சிலாங்கூர் சாரிங் பகுதியில் பதிவு செய்ய வேண்டும். சோதனைக்கான கூப்பன் செலங்கா செயலி வழி வழங்கப்படும்

கேள்வி- ஒவ்வொரு பகுதிக்கும் எத்தனை சிலாங்கூர் சாரிங் கூப்பன்கள் வழங்கப்படும்-

பதில்- தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் ஒவ்வொரு  தொகுதியிலும் 500 முதல் 1,000 கூப்பன்கள் வரை வழங்கப்படும்.

கேள்வி- சிலாங்கூர் சாரிங் கூப்பன்களைப் பெறுவதற்காக விண்ணப்பம் செய்யும் போது நான் ஏன் இடர் மதிப்பீடு தொடர்பான கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும்?

பதில்- விண்ணப்பதாரர்கள் எந்த மாதிரி சோதனைக்கு தகுதியானவர்கள் என்பதைக் கண்டறிவதற்காக இந்த கேள்விகள் கேட்கப்படுகின்றன. அளிக்கப்பட்ட பதிலின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேக கூப்பன்கள் வழங்கப்படும்.

கேள்வி- சிலாங்கூர் சாரிங் சோதனை முடிவுகள எவ்வாறு பெற முடியும்?

பதில்- செலங்கா செயலியின் சிலாங்கூர் சாரிங் பகுதியின் வழி சோதனை முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

கேள்வி- சிலாங்கூர் சாரிங் பங்கேற்பாளர்களின் சோதனை முடிவுகள் எத்தனை நாட்களில் தயாராகும்?

பதில்- சோதனை முடிந்த 5 முதல் 7 நாட்களில் முடிவுகள் தயாராகி விடும்.

கேள்வி- சிலாங்கூர் சாரி திட்டத்திற்கு வரும் போது எந்த ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும்?

பதில்- அடையாள நோக்கத்திற்காகவும் செலங்கா செயலியில் சிலாங்கூர் சாரிங் கூப்பனை பதிவிடுவதற்காகவும் பரிசோதனைக்கு வருவோர் தங்கள் அடையாளக் கார்டை உடன் கொண்டு வரவேண்டும்.

கேள்வி- இந்த சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் மலேசியர்கள் மட்டும் பங்கேற்க முடியுமா?

பதில்- சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் மலேசியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

கேள்வி- பதிவு செய்த இடத்தை விட வேறு இடத்தில் சிலாங்கூர் சாரிங் பரிசோதனைக்கு விண்ணப்பதாரர்கள் செல்ல முடியுமா?

 பதில்-  சிலாங்கூர் சாரிங் திட்டத்திற்கு பதிவு செய்த இடத்திற்கு மட்டுமே விண்ணப்பதாரர்கள் செல்ல முடியும். வேறு இடங்களுக்கு செல்ல முற்றாக அனுமதி மறுக்கப்படுகிறது. இடம் அல்லது தேதியை மாற்ற விரும்புவோர் செயலியில் உள்ள “Tukar Sesi/Tarikh Program” எனும் பட்டனை அழுத்த வேண்டும்.

கேள்வி- எனது வீட்டிற்கு அருகில் நடைபெறும் சோதனையில் நான் ஏன் பங்கேற்க முடியாது?

பதில்- நீங்கள் மேற்கொள்ளவுள்ள சோதனை உங்கள் தேர்வுக்குரிய தொகுதியில் மேற்கொள்ளப்படாது. பரிசோதனைக்கு ஏற்பாடு  செய்துள்ள தொகுதிகளின் பட்டியலை மட்டுமே எங்கள் செயலி முறை கொண்டுள்ளது.


Pengarang :