ECONOMYSELANGOR

மோரிப் தொகுதி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் 2,000 பேர் பங்கேற்றனர்

கோல லங்காட், மே 30- மோரிப் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக எந்தவொரு ஒன்று கூடல் நிகழ்வும் நடைபெறாமலிருந்த நிலையில் இந்த பொது உபசரிப்பு நிகழ்வை பத்து கிராம மேம்பாட்டு நிர்வாக மன்றங்களுடன் இணைந்து வெகு விமரிசையாக தாங்கள் ஏற்பாடு செய்திருந்ததாக மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.

பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மால் பொது நிகழ்வு எதனையும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இவ்வாண்டில் அத்தகைய நிகழ்வுகளைத் நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த பொது உபசரிப்பை சிறப்பான முறையில் நடத்துவதற்காக கடந்த ஒரு மாத காலமாக முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்தோம் என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள ஸ்ரீ ஜூக்ரா எம்.பி.கே.கே. மண்டபத்தில் இரவு 8.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாட் சாபு உள்பட மூவினங்களையும் சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களுக்காக பல்வேறு உணவுப் பதார்த்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோடு சிறார்களுக்கு பெருநாள் பண அன்பளிப்பும் வழங்கப்பட்டது.


Pengarang :