ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இலவ மருத்துவ பரிசோதனையில் சிலருக்கு  கடும் நோய்க்கான அறிகுறிகள் கண்டுபிடிப்பு

 ஷா ஆலம், ஜூன் 4- கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனையில் ஒரு சிலர் கடுமையான நோய்களுக்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. சோதனைகளின் முடிவில் சிலருக்கு புற்று நோய் போன்ற கடுமையான நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. எனினும், இது முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த சோதனையின் முடிவுகள் நிபுணர்களின் ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படும். நோயின் தன்மையைக் கண்டறிய அங்கு விரிவான சோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார். சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் பிரதான நோக்கம் இதுவாகும்.

கடுமையான நோய்களுக்கான அறிகுறிகளை மக்கள் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும் என விரும்புகிறோம் என்றார் அவர். சிலாங்கூர் மாநில அரசு 34 லட்சம் வெள்ளி செலவில் இந்த இலவச பரிசோதனைத் திட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 மாதம் ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பரிசோதனை இயக்கத்தின் வாயிலாக 39,000 பேர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :