கோலாலம்பூர், ஜூன் 5: தொங்கா தீவுகளில் நேற்று இரவு 9.07 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் கண்டறியப்பட்டது.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) அறிக்கையின்படி, ஃபிஜியின் லாவுகாலாவில் இருந்து கிழக்கே 690 கிலோமீட்டர் (கிமீ) தொலைவில் 238 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
எனினும், இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.