ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நிறுவனங்கள் பொருத்தமான பணியாளர்களைப் பெறுவதில் மெகா வேலை வாய்ப்புத் திட்டம் உதவி

ஷா ஆலம், ஜூன் 12- சிலாங்கூர் அரசின் “கார்னிவெல் கெர்ஜாயா மெகா 2022“ வேலை வாய்ப்புத் திட்டத்தின் வழி தங்கள் சேவைகளை பொதுமக்களுக்கு விளம்பரப் படுத்துவதற்குரிய வாய்ப்பினை நோர்த்போர்ட் (மலேசியா) பெர்ஹாட் நிறுவனம் பெற்றுள்ளது.

கோலக் கிள்ளானில் அதிக தொலைவிலுள்ள துறைமுகமாக நோர்த்போர்ட் விளங்குவதால் அந்நிறுவனம் குறித்து பொதுமக்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை என்று அதன் இழப்பீட்டு மற்றும் ஊக்குவிப்பு பிரிவின் தலைவர் பவுசி பட்லி கூறினார்.

இந்த வேலை வாய்ப்பு சந்தையில் நாங்கள் முகப்பிடத்தை திறந்த போது எங்கள் நிறுவனம் குறித்து அறிந்து கொள்ள பலர் ஆர்வம் காட்டினர். சுமார் 40 வேலை வாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இது எங்கள் நிறுவனத்திற்கு சிறப்பான அறிகுறியாக உள்ளது என்று அவர் சொன்னார்.

பொது வேலையாட்கள் தொடங்கி நிர்வாகப் பிரிவு வரை எண்பதுக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம். திறன்மிக்க தொழிலாளர்களை பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளதால் மாநில அரசின் இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் நாங்கள் தொடர்ந்து பங்கேற்போம் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சிறைச்சாலையின் அடிப்படை பொருள்களான  தூக்கு கயிறு, உடைகள் மற்றும் கைதிகள் பயன்படுத்தும் பொருள்களை இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் தாங்கள் காட்சிக்கு வைத்துள்ளதாக காஜாங் சிறைச்சாலையின் பிரதிநிதி இன்ஸ்பெக்டர்  சோஹேடி இஸ்மாயில் கூறினார்.

சிறைச்சாலை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, பொதுமக்களுக்கு கூடுதல் தகவல்களைத் தருவதற்காக இந்த கண்காட்சிக்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம் என்றார் அவர்.

இந்த கார்னிவெல் கெர்ஜாயா மெகா வேலை வாய்ப்புச் சந்தை நேற்று தெடாங்கி இன்று வரை ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் மாநாட்டு மையத்தில்  நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கேற்றுள்ள சுமார் 100 நிறுவனங்கள் 20,000 வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.

 


Pengarang :