ECONOMYHEALTHNATIONALSELANGOR

சிலாங்கூரில் 26,419 கை, கால் மற்றும் வாய் நோய் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன

ஷா ஆலம், ஜூன் 14: மாநிலத்தில் ஜூன் 11 ஆம் தேதி வரை மொத்தம் 26,419 கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) பதிவாகியுள்ளதாக பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 639 சிறார்கள் மேலதிக கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக டாக்டர் சித்தி மரியா மாமூட் தெரிவித்தார்.

“ஆண்டு முழுவதும், நாங்கள் 253 கை, கால் மற்றும் வாய் நோய் தொற்று கிளஸ்டர்களைக் கண்டறிந்தோம், ஆனால் அவை அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன. பெட்டாலிங்கில் அதிகபட்சமாக 8,699 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து உலு லங்காட் (4,081) மற்றும் கோம்பாக் (3,991) என்று அவர் இன்று சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை (ஜேகேஎன்எஸ்) 291 குழந்தைப் பராமரிப்பு வளாகங்களை மூடுவது உட்பட, சிக்கலைத் தீவிரமாகச் சமாளித்து வருவதாக அவர் கூறினார்.

“தொற்றைக் கட்டுப்படுத்த மொத்தம் 46 மையங்களும் தானாக முன்வந்து தங்கள் செயல்பாடுகளை மூடியுள்ளன. அதே நேரத்தில், ஜேகேஎன்எஸ் பராமரிப்பு மையத்தில் வழிகாட்டுதல் அமர்வு மற்றும் இடர் மதிப்பீட்டையும் நடத்தியது, ”என்று அவர் கூறினார்.

ஜூன் 4 நிலவரப்படி, மொத்தம் 82,846 கை, கால் மற்றும் வாய் நோய் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,485 ஆக இருந்ததை விட 32 மடங்கு அதிகமாகும்.

இருப்பினும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தொற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜூன் 9 ஆம் தேதி சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.


Pengarang :