MEDIA STATEMENT

வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்

ஈப்போ, ஜூன் 15: கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலா காங்சாரில் தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் KM 253 இன் வலதுபுறம் பாதையில் காரை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த தாகக் கருதப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட், 36 வயதான சந்தேக நபர், கோலாலம்பூரில் உள்ள தாமான் ஸ்தாப்பாக் பெர்மாயில்  உள்ள அவரது வீட்டில் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

“சந்தேக நபர் போதைப்பொருள் பயன்படுத்தி கட்டுப்பாட்டை இழந்ததால்  கோபமடைந்ததாக நம்பப்படுகிறது.

பெர்னாமாவை இன்று இங்கு தொடர்பு கொண்ட போது, “விசாரணை ஆவணம் பேராக் மாநில வழக்குரைஞர் இயக்குநரிடம் மேலதிக அறிவுறுத்தல்களுக்கு இன்று பரிந்துரைக்கப்படும்” என்று அவர் கூறினார்.

சந்தேகநபர் நேற்று காலை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், அவர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத் துரோகம் மற்றும் பொதுச் சாலைகளில் இடையூறு செய்தமைக்காகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, சாலையில் வாகனங்களால் ஏற்படும் இடையூறுகளுக்காகவும் தண்டனைச் சட்டம் பிரிவு 427 மற்றும் பிரிவு 283 ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப் படுகிறது.

நெடுஞ்சாலையின் வலதுபுறப் பாதையில் நிற்கும் நபரின் புகைப்படம் சமூக ஊடக பயனர்களால் பதிவேற்றப்பட்டது, சந்தேக நபர் வாகனத்தில் இருந்து இறங்குவதற்கு முன்பு காரை நிறுத்திவிட்டு தங்கச் சங்கிலியை பிடித்து கொண்டு அருகில் உள்ள காரில் ஏறி வெறித்தனமாக செயல்பட்டு, அந்த வழியாகச் சென்ற மற்றொரு காரின் முன்பகுதியை உதைப்பதை காணமுடிந்தது.


Pengarang :